Monday, November 30, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"
இந்த மாதிரி அமெரிக்கால்-, இங்கிலாந்து- இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"
சரி""இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MS
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"
அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்."அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-
னா?"
"Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"
இதுக்கு அவன் ஒத்துபானா?"
"
ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"
அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"
அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"
அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.
"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."
"
பாவம்பா"
"
ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"
எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"
நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"
"
இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"
இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"
வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"
அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"
கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"
எப்படி?"
"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்- ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"
சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"
அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"
அப்புறம்?"
"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"
அப்புறம்?"
"
அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்- ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"
எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Friday, September 18, 2009

இணையம் இருந்தால்

வணக்கம் நண்பர்களே,

இன்று நம்முடைய பதிவு ஒரு ரிமோட் கண்ட்ரோல் மென்பொருளை பற்றியது, சில சமயங்களில் நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர் எங்காவது சென்றிருந்தால் வீட்டில் உள்ள கணினி யை தொடர்பு கொள்ள எதாவது ஒரு மென்பொருள் இருந்தால் நம்முடைய கணினியுள்ள கோப்புகளை பார்க்கவும், கோப்புகளை பரிமாறி (வீட்டு அல்லது அலுவலக கணினியிலிருந்து) கொள்ளவும் மிகவும் உபாயோகமாகவும் இருக்கும் என பல நேரங்களில் நினைத்திருப்போம். அது போல அலுவலக நண்பர்கள் (மென் மற்றும் வன் பொறியாளர்கள்) தங்களுடைய கிளை அலுவலகங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது இந்த மென் பொருள் மிகவும் உபாயோகமானது, இதற்க்கு கிழே உள்ள முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளவும்.டீம் விஎவேர் என்று பெயர்
மேலும் இங்கு படி படியான இன்ச்டலாசன் முறை கொடுக்க பட்டுள்ளது,

இன்ஸ்டால் என்ற பட்டன் செலக்ட் செய்துவிட்டு, நெக்ஸ்ட் பட்டன் கிளிக் செய்யவும்.

அடுத்தது பெசொனால் நான் காம்மர்சியால் என்ற பிரிவை தேர்தெடுத்து நெக்ஸ்ட் பட்டன் கிளிக் செய்யவும்.

கிழே உள்ள இரண்டு செக் பாக்ஸ் களையும் டிக் செய்து மென்பொருளின் கட்டுப்பாடு மற்றும் விதிகளுக்கு ஒ.கே சொல்லவும்.

இப்போது புல் அச்செஸ் என்ற பிரிவை செலக்ட் செய்து நெக்ஸ்ட் குடுக்கவும்


இன்ச்டலாசன் இப்போது ஸ்டார்ட் ஆகும்

பினிஷ் பட்டன் கிளிக் செய்து இன்ச்டலாசன் பூர்த்தி செய்யவும்.

இப்போது உங்களுடைய தேச்க்டப் இல் இந்த டீம் விஎவேர் மென்பொருள் பதிந்திருப்பது தெரியும், இதை கிளிக் செய்யவும் இடது பாகத்தில் User ID மற்றும் Password பகுதியில் உங்களுக்கு இந்த மென்பொருள் ஆனது அதுவாகவே password and User ID குடுக்கும்.
இதேபோல் பல கணினி கலீல் இந்த மென்பொருளை நிறுவி, ID என்ற இடத்தில அந்த ID குடுத்து உங்களுக்கு தேவையான Remote Desktop, Presentation, File Transfer, VPN, போன்றவற்றை உபயோகபடுத்தலாம்.
இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன், பின்னுட்டம் இட்டு உர்ச்சகபடுதவும் . மேலும் 3 நாட்கள் அலுவலக விடுமுறை, முடிந்தவரை மேலும் நிறைய பதிவு எழதுகிறேன்.

நன்றியுடன்
Radhakrishnan R



Tuesday, September 1, 2009

எம் எஸ் ஆபீஸ் 2007 பைல் பார்மட் கன்வெர்டெர்




பொதுவாக நம்முடைய அலுவலகங்களில் நம்மில் பெரும்பாலானோர் எம் எஸ் ஆபீஸ் உபாயோக படுத்துகிறோம். இப்போதெல்லாம் சில அலுவலகங்களில் மைக்ரோசாப்ட் குடுக்கும் லேட்டஸ்ட் ஆபீஸ் தொகுப்புகளையே உபாயோகபடுதுகிறார்கள். உதாகரனதுக்கு எம் எஸ் ஆபீஸ் 2007. இதில் என்ன ஒரு பிரச்சினை என்றால், லேட்டஸ்ட் வேர்சொநிலிருந்து அனுப்பும் கோப்புகள் பழைய வெர்சன் இல் திறக்க முடியாது. எடுத்துகாட்டு - Ms-office 2007 - word - docx, excel - xlsx, power point - pptx என்றும், பழய ஆபீஸ் ஆனது முறையே word - doc, excel - xls, Power Point - ppt, எனவும் சேமிக்கப்படும். ஆகவே புதிய  வெர்சன்  கோப்புகள் பழைய  வெர்சன் இல் திறக்க முடியாது.
இதற்க்கு மைக்ரோசாப்ட் இன் பைல் பார்மட் கன்வடேர் எனும் மென்பொருள் உபாயோக படுத்தலாம் 
இது எல்லா வகையான புதிய  ஆபீஸ் கோப்புகளை பழைய வேர்சொனுக்கு கன்வர்ட் பண்ணி குடுக்கிறது. இதனால் எல்லா வகையான புதிய ஆபீஸ் கோப்புகளை திறக்க இயலுகிறது.
தரவிறக்கத்துக்கு இங்கு கிளிக் செய்யவும்.



http://www.microsoft.com/downloads/thankyou.aspx?familyId=941b3470-3ae9-4aee-8f43-c6bb74cd1466&displayLang=en

Friday, August 28, 2009

தமிழில் எழுத ஒரு சிறு முயற்சி

வணக்கம் நண்பர்களே,
சமீப காலமாக எனக்கு தமிழில் எழுத
எழுத வேண்டும் என்று ஒரு சிறு முயற்சியாக இதை எழுதுறேன். இதற்க்கு மூல காரணம் நம்முடை
ய பி கே பீ சார் மற்றும் இட்லி வடையாரின் வலை பக்கங்கள் தான்
காரணம்.
சமீபத்தில் பெங்களுரு செல்ல வேண்டி இருந்தது. இங்கு ஒரு ஊர் புலிகேசி நகர் என்று பெயர், இங்கு எல்லா வருடங்களும் ஒரு நல்ல
பழக்கம் இந்த ஊர் மக்களுக்கு, அது என்னவென்றால் இங்கு ஒரு மேரி மாத மற்றும் ஒரு அம்மன் கோயில் உள்ளது, ஒவ்வ
ரு வருடமும் இந்த இரண்டு கோயில் திருவிழாக்களும் ஒரே நாளில் நடக்கிறது, இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம்
என்னவென்றால் இந்து மதத்தவரும் கிறிஸ்தவ மதத்தவரும் இணைந்து இந்த
திருவிழாவை சீரோடும் சிறப்போடும் நடத்துகிறார்கள், உண்மையில் இது ஒரு மத நல்லினகதுக்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு. நம்ம ஊரில் எப்போது
இந்த மாதிரி ஒற்றுமையாக இருக்க போகிறோமோ ?


ஒரு அருமையான அண்டி வைரஸ் மென்பொருள்,
உங்களுடைய பர்சனல் மற்றும் சிறிய அலுவலகங்களுக்கு மிகவும் உபயோகமானது, இது ஒரு இலவச மென்பொருள், முயற்சி செய்து பார்க்கவும். டவுன்லோட் செய்ய

Monday, August 24, 2009

Acive Directory user accounts locked out frequently

Yesterday I faced a problem with active directory, all users account locked out frequently, So I just thought to share this issue with you, Please find the details of that issue and how we rectified.

Problem

All users account locked out frequently, if I unlock also again and again it was locked out frequently.

Solution for this issue

1) First I downloaded one unlock.exe file, it’s a very good tool for unlock user account for locked accounts

2) we can download this file from http://www.joeware.net/freetools/tools/unlock/index.htm

3) Once downloaded this file put it into separate folder and in the same folder we have to create a batch file with a small script

4) Here is the way how to create the batch file with script

5) Open a notepad and type this script

cls

@ECHO OFF

unlock brigadedc *

unlock brigadeadc *

6) instead of giving brigadedc and brigadeadc you should give your DC and ADC name

7) Save this script as unlock.bat in the same folder which one we downloaded and put it into separate folder

8) Now we need to run this batch file for unlock the users account automatically, so that users will not face the problem with their work.

9) For that we need to schedule this task, go to control panel and select scheduled task

10) Add a new scheduled task and click next and click browse and select the unlock.bat file which one we created and saved the scripts

11) Perform this task on daily and give the user name and password with domain admin privileged account name

12 Select the tick mark for advanced settings, In advanced scheduled options we have to select Repeat task and run this task Every 1 min, So that this will run in every 1 minutes and will unlock all account for this one minitue period, so that user will not face any locked out problems.

13) Now account locked out we rectified, but we should solve the issue why all accounts are locked frequently

14) First we need to enable the audit policy (both success and failure policy)

15) Go to Domain controller policy and Local policy ----Audit policy---Define these all policies success and failure, So that we can see the logon attempt failure audits

16) Once we done this..Go to Event Viewer in DC, Select security and see the audit success and failure, there must be some failure audits

17) Find out the failure audits and track the ip address and host name of the machine which one is giving failure audit logon attempts failure

18) I got 3 failure audit for logon attempt failure in security event, I tracked that 3 machines and put it into virus scan, But unfortunately our Symantec AV found one virus but unable to quarantine or delete this virus

19) So I taken backup of these 3 machine and formatted this 3 machines

20) Now the entire virus gone and the users account came normally (not locked out), Remove the scheduled task, now its working fine.

Note : The virus name is W32 conflicker.exe, Later I realize that the virus is generating from Symantec only, the reason is our Symantec AV product was expired 3 months back and now we are using Symantec 11 trial version, for purchasing the new license Symantec may create the virus and sending to client machines!!!!

Microsoft is giving a new updates for preventing these kind of Malwares, Please find the link and please suggest our colleagues to install on all our client machines

http://www.microsoft.com/downloads/thankyou.aspx?familyId=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03&displayLang=en

http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=AD724AE0-E72D-4F54-9AB3-75B8EB148356&displaylang=en

But its not removing any virus, only it will prevent from virus.


Thanks & Regards

Radhakrishnan R

Thursday, May 14, 2009

File Server 2003 Unable to access shared folder cant access


Today we are going see a new issue with windows 2003 File server, 
Most of the windows administrator not aware of this serious and simple file server issue, Some times your windows file server will be up but users cant access their shared folder.
In file server also it will show their folder but the sharing should not be show and users can not access the shared folder.
Here is the solution for that..
1) Open the windows 2003 file server
2) Select the shared folder options in file server
3) If the sharing is missed on all folders...
4) Minimize this File Server
5) Go to start--Run--In run... type
6) services.msc
7) Here one services window will come and you have to select in the right side services
8) Select the service called Server
9) This server service should be stop state, you have to start this service or give restart this service and give automatic start option
10) The reason is the netlogon and server serices was not started thats why the reason your users unable to access the File server.

Once you done these process definetely your user can access the file server.


Regards
Radhakrishnan R