Thursday, December 24, 2009

DSRM (Directory Service Restore Mode) பாஸ்வோர்ட் எப்படி மாற்றி அமைக்கலாம்

நண்பர்களே,
விண்டோஸ் சர்வர் ஆனது பல mode களில் இயங்க கூடியது, உதரணத்துக்கு நார்மல் mode, Safe Mode, Safe Mode with command prompt, Last Known Good Confuguration, மற்றும் DSRM Mode (Directory Service Restore Mode), இன்று நாம் பார்க்க போவது DSRM Mode பற்றி.
எதற்காக எந்த DSRM Mode, நம்முடைய கணினி ஆனது Normal Mode லேயே இயங்க கூடியது, சில சமயங்களில் ஹர்ட் டிஸ்க் கிராஷ் மற்றும் வன்பொருள் பிரச்சினைகள் எற்படும் அதிலும் server ஆக இருப்பின் பெரும் பிரச்சினைக்கு உள்ளாக நேரிடும் ஏன் எனில் பல சேவைகள் (Services)  இதில் இயங்கிகொண்டிருக்கும் உதகரனதுக்கு Active Directory, Group Policy, DNS,DHCP,WINS..Etc..போன்றன. இந்த சர்வீஸ் ஆனது Normal Mode லேயே இயங்க கூடியது, இப்போது இந்த server இல் எதாவது பிரச்சினை என்றால் server மட்டுமல்லாது அதை சார்ந்துள்ள அனைத்து சேவைகளும் பாதிக்கப்படும், எனவே server ஆனது நார்மல் mode இல் இயங்கி கொண்டிருக்கும் போதே இந்த சேவைகளையும், முக்கியமான கோப்புகளையும் Backup எடுத்து கொள்ளவேண்டும், அப்படி எடுத்தால் நம்முடைய அனைத்து சேவைகள்,கோப்புகள் அனைத்தையும் எந்தவிதமான இடையூறுமின்றி மீட்கலாம், அப்படி மீட்பதற்கு உதவி செய்வதுதான் இந்த DSRM Mode.
                                Windows Server இல் இரண்டு விதமான password கள் உள்ளது, ஒன்று Normal Mode இல் இயங்கக்கூடியது இன்னொன்று Safe Mode and DSRM Mode இல் இயங்க கூடியது. ஆகையால் Normal Mode Password வேறு DSRM Mode பாஸ்வோர்ட் வேறு, 
பெரும்பாலான சமயங்களில் நாம் DSRM password மறந்தே போயிருப்போம், அதை எப்படி மாற்றி அமைப்பது என்று பார்க்கலாம்.

முதலில் படத்தில் உள்ளது போல start சென்று cmd என குடுத்து ஓகே குடுக்கவும், அடுத்து command prompt ஆனது திறக்கப்படும், command prompt இல் ntdsutil என டைப் செய்யவும்.

இப்போது படத்தில் உள்ளது போல ser dsrm password என டைப் செய்யவும்.

இப்போது படத்தில் உள்ளது போல reset password on server இதில் Name என்பது எந்த server உடைய password மாற்ற வேண்டுமோ அந்த server உடைய பெயரை குடுக்கவும்.

இப்போது படத்தில் உள்ளது போல புதிய password மற்றும் அதை உறுதி செய்வதற்கான password குடுத்து ஓகே குடுக்கவும்.

இப்போது படத்தில் உள்ளதுபோல உங்களுடைய password ஆனது மாற்றி அமைக்கப்பட்டு விடும், பிறகு இரண்டு முறை quit குடுத்து ntdsutil விட்டு வெளியேறவும்.
இந்த பதிவு பிடித்து இருந்தால் தங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாக இடவும், என்னை தொடர்பு கொள்ள systechrk@ovi.com
எல்லோருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
நன்றி 





Saturday, December 5, 2009

கணினியின் அனைத்து தகவல்களும் பெற ஒரு மென்பொருள்


                                       கணினியின் அனைத்து தகவல்களும் பெற ஒரு மென்பொருள்
உங்களுடைய கணினியில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் இந்த மென் பொருள் மூலம் நீங்கள் பெறலாம். இது ஒரு இலவச மென்பொருள், மைக்ரோசாப்ட் மற்றும் மிகச்சிறந்த நிறுவனங்கள் இதை தங்களுடைய audit இக்காக பயன்படுத்துகின்றனர். இது கிழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான Operating System ( தமிழில் தெரியவில்லை) இல் இயங்கக்கூடியது.
on Windows 7, 2008 R2, Vista, 2008, 2003, XP, 2000, NT 4, Me, 98, and 95. Both 32-bit and 64-bit விண்டோஸ்
இதை எப்படி நிறுவுவது என்று பார்க்கலாம், முதலில் இந்த சுட்டியை சொடிக்கி தரவிறக்கி கொள்ளுங்கள்
 http://www.belarc.com/free_download.html
அடுத்ததாக Download Belarc Advisor என்ற பிரிவை சொடுக்கவும், தரவிறக்கம் ஆரம்பமாகும்.
advisor.exe என்று சேமிக்கப்படும் கோப்பினை இரண்டு முறை சொடுக்கினால்



படத்தில்உள்ளது போல Run எனும் பிரிவை தேர்தெடுத்து நிறுவ ஆரம்பிக்கவும்,
அடுத்ததாக  இந்த மென்பொருளின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு I Agree என்ற பிரிவை
 தேர்வு செய்யவும்        

அடுத்ததாக Install என்ற பொத்தானை அழுத்தினால் இந்த மென்பொருள்
 ஆனது உங்களுடைய கணினியில் நிறுவ தயாராகிவிடும்.    

     

படத்தில் உள்ளது போல Installation ஆரம்பித்துவிடும்.

இப்போது No என்ற பிரிவை தேர்வு செய்யவும்.
இப்போது இது உங்களுடைய கணினியில் நிறுவப்பட்டுவிட்டது.
       


மேலே உள்ள படத்தில் உள்ளவாறு இந்த ரிப்போர்ட் ஆனது உங்கள் கணினி திரையில் தோன்றும், உங்கள் கணினியின் அனைத்து வகையான தகவல்களும் இந்த ரிப்போர்ட் இல் நீங்கள் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், முகவரி systechrk@ovi.com
நன்றி

Wednesday, December 2, 2009

ஒரு நல்ல file server எப்படி உருவாக்குவது

நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது ஒரு நல்ல file server எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
இது விண்டோஸ் செர்வேர்களுக்கு மட்டுமே, முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின்  படி செல்லவும்.உங்களுடைய விண்டோஸ் 2003 மற்றும் 2000 செர்வேர்களில் இந்த file சர்வர் நிறுவலாம். முதலில் படத்தில் உள்ளபடி start--programs or All Programs --Administrative Tools--Configure your server wizard என்ற பிரிவை தேர்வு செய்யவும்



அடுத்ததாக Welcome to the configure your server wizard என்ற விண்டோ தோன்றும் இதில் அடுத்த பொத்தானை தேர்வு செய்யவும்.

 அடுத்ததாக இந்த file server உருவாக்க அடிப்படை  தேவைகள் என்ன என்ற விண்டோ தோன்றும் இதில் அடுத்த பொத்தானை தேர்வு செய்யவும்.
   
அடுத்ததாக configure your server wizard என்ற பகுதி தோன்றும், அதில் server role - file server என்று  தேர்வு செய்து அடுத்த பொத்தானை தேர்வு  செய்யவும்.

அடுத்ததாக configure your server wizard இன் வலது பக்கத்தில் Manage your server என்ற பகுதியை நீங்கள் பார்க்கலாம். இப்போது செர்வர் configure ஆனவுடன் (குறிப்பு - சர்வர் ரோல் ஆனது செலக்ட் செய்யும் போது விண்டோஸ் OS தொகுப்பு மென்தட்டு CD டிரைவ் இல் போடவேண்டும்). அடுத்ததாக manage your server பகுதியை செலக்ட் செய்யவும், இப்போது கிழே படத்தில் உள்ளது போல தோன்றும். இதில் நீங்கள்
 உருவாக்கிய filer server தெரியும். இதில் manage your file server என்ற பிரிவை தேர்வு
 செய்யவும்.
 

இப்போது உங்களுடைய சர்வர்ஆனது கிழே படத்தில் உள்ளது போல தெரியும்,தேவையான பகுதிகளை தேர்வு  செய்து தேவையான file server உருவாக்கி அதை கையாழலாம். உதரணத்துக்கு shared folder - உருவாக்கி பலருக்கு ஒரே சமயத்தில் அந்த folder ருக்கான அனுமதி கொடுப்பது போன்றவற்றை உருவாக்கலாம்.                 


 ஒரு முறை உங்களுடைய விண்டோஸ் சர்வர் இல் உருவாக்கி பாருங்கள். எதாவது சந்தேகம் இருந்தால் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி systechrk@ovi.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால், உங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாக இடவும்.
நன்றி

Monday, November 30, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"
இந்த மாதிரி அமெரிக்கால்-, இங்கிலாந்து- இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"
சரி""இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MS
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"
அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்."அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-
னா?"
"Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"
இதுக்கு அவன் ஒத்துபானா?"
"
ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"
அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"
அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"
அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.
"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."
"
பாவம்பா"
"
ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"
எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"
நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"
"
இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"
இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"
வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"
அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"
கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"
எப்படி?"
"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்- ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"
சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"
அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"
அப்புறம்?"
"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"
அப்புறம்?"
"
அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்- ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"
எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."