Wednesday, December 2, 2009

ஒரு நல்ல file server எப்படி உருவாக்குவது

நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது ஒரு நல்ல file server எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
இது விண்டோஸ் செர்வேர்களுக்கு மட்டுமே, முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின்  படி செல்லவும்.உங்களுடைய விண்டோஸ் 2003 மற்றும் 2000 செர்வேர்களில் இந்த file சர்வர் நிறுவலாம். முதலில் படத்தில் உள்ளபடி start--programs or All Programs --Administrative Tools--Configure your server wizard என்ற பிரிவை தேர்வு செய்யவும்



அடுத்ததாக Welcome to the configure your server wizard என்ற விண்டோ தோன்றும் இதில் அடுத்த பொத்தானை தேர்வு செய்யவும்.

 அடுத்ததாக இந்த file server உருவாக்க அடிப்படை  தேவைகள் என்ன என்ற விண்டோ தோன்றும் இதில் அடுத்த பொத்தானை தேர்வு செய்யவும்.
   
அடுத்ததாக configure your server wizard என்ற பகுதி தோன்றும், அதில் server role - file server என்று  தேர்வு செய்து அடுத்த பொத்தானை தேர்வு  செய்யவும்.

அடுத்ததாக configure your server wizard இன் வலது பக்கத்தில் Manage your server என்ற பகுதியை நீங்கள் பார்க்கலாம். இப்போது செர்வர் configure ஆனவுடன் (குறிப்பு - சர்வர் ரோல் ஆனது செலக்ட் செய்யும் போது விண்டோஸ் OS தொகுப்பு மென்தட்டு CD டிரைவ் இல் போடவேண்டும்). அடுத்ததாக manage your server பகுதியை செலக்ட் செய்யவும், இப்போது கிழே படத்தில் உள்ளது போல தோன்றும். இதில் நீங்கள்
 உருவாக்கிய filer server தெரியும். இதில் manage your file server என்ற பிரிவை தேர்வு
 செய்யவும்.
 

இப்போது உங்களுடைய சர்வர்ஆனது கிழே படத்தில் உள்ளது போல தெரியும்,தேவையான பகுதிகளை தேர்வு  செய்து தேவையான file server உருவாக்கி அதை கையாழலாம். உதரணத்துக்கு shared folder - உருவாக்கி பலருக்கு ஒரே சமயத்தில் அந்த folder ருக்கான அனுமதி கொடுப்பது போன்றவற்றை உருவாக்கலாம்.                 


 ஒரு முறை உங்களுடைய விண்டோஸ் சர்வர் இல் உருவாக்கி பாருங்கள். எதாவது சந்தேகம் இருந்தால் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி systechrk@ovi.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால், உங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாக இடவும்.
நன்றி

No comments:

Post a Comment