Thursday, December 24, 2009

DSRM (Directory Service Restore Mode) பாஸ்வோர்ட் எப்படி மாற்றி அமைக்கலாம்

நண்பர்களே,
விண்டோஸ் சர்வர் ஆனது பல mode களில் இயங்க கூடியது, உதரணத்துக்கு நார்மல் mode, Safe Mode, Safe Mode with command prompt, Last Known Good Confuguration, மற்றும் DSRM Mode (Directory Service Restore Mode), இன்று நாம் பார்க்க போவது DSRM Mode பற்றி.
எதற்காக எந்த DSRM Mode, நம்முடைய கணினி ஆனது Normal Mode லேயே இயங்க கூடியது, சில சமயங்களில் ஹர்ட் டிஸ்க் கிராஷ் மற்றும் வன்பொருள் பிரச்சினைகள் எற்படும் அதிலும் server ஆக இருப்பின் பெரும் பிரச்சினைக்கு உள்ளாக நேரிடும் ஏன் எனில் பல சேவைகள் (Services)  இதில் இயங்கிகொண்டிருக்கும் உதகரனதுக்கு Active Directory, Group Policy, DNS,DHCP,WINS..Etc..போன்றன. இந்த சர்வீஸ் ஆனது Normal Mode லேயே இயங்க கூடியது, இப்போது இந்த server இல் எதாவது பிரச்சினை என்றால் server மட்டுமல்லாது அதை சார்ந்துள்ள அனைத்து சேவைகளும் பாதிக்கப்படும், எனவே server ஆனது நார்மல் mode இல் இயங்கி கொண்டிருக்கும் போதே இந்த சேவைகளையும், முக்கியமான கோப்புகளையும் Backup எடுத்து கொள்ளவேண்டும், அப்படி எடுத்தால் நம்முடைய அனைத்து சேவைகள்,கோப்புகள் அனைத்தையும் எந்தவிதமான இடையூறுமின்றி மீட்கலாம், அப்படி மீட்பதற்கு உதவி செய்வதுதான் இந்த DSRM Mode.
                                Windows Server இல் இரண்டு விதமான password கள் உள்ளது, ஒன்று Normal Mode இல் இயங்கக்கூடியது இன்னொன்று Safe Mode and DSRM Mode இல் இயங்க கூடியது. ஆகையால் Normal Mode Password வேறு DSRM Mode பாஸ்வோர்ட் வேறு, 
பெரும்பாலான சமயங்களில் நாம் DSRM password மறந்தே போயிருப்போம், அதை எப்படி மாற்றி அமைப்பது என்று பார்க்கலாம்.

முதலில் படத்தில் உள்ளது போல start சென்று cmd என குடுத்து ஓகே குடுக்கவும், அடுத்து command prompt ஆனது திறக்கப்படும், command prompt இல் ntdsutil என டைப் செய்யவும்.

இப்போது படத்தில் உள்ளது போல ser dsrm password என டைப் செய்யவும்.

இப்போது படத்தில் உள்ளது போல reset password on server இதில் Name என்பது எந்த server உடைய password மாற்ற வேண்டுமோ அந்த server உடைய பெயரை குடுக்கவும்.

இப்போது படத்தில் உள்ளது போல புதிய password மற்றும் அதை உறுதி செய்வதற்கான password குடுத்து ஓகே குடுக்கவும்.

இப்போது படத்தில் உள்ளதுபோல உங்களுடைய password ஆனது மாற்றி அமைக்கப்பட்டு விடும், பிறகு இரண்டு முறை quit குடுத்து ntdsutil விட்டு வெளியேறவும்.
இந்த பதிவு பிடித்து இருந்தால் தங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாக இடவும், என்னை தொடர்பு கொள்ள systechrk@ovi.com
எல்லோருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
நன்றி 





1 comment:

  1. Really useful details for administrators, thanks a lot

    ReplyDelete