Thursday, January 7, 2010

IIS என்பது என்ன?

வணக்கம் நண்பர்களே! 
இன்று நாம் பார்க்க இருப்பது IIS எனும் ஒரு சேவையை பற்றியது.
IIS என்பது என்ன?
Internet Information service என்பதின் சுருக்கமே IIS, 
IIS ஆனது secure, available and scalable, web server ஆக விளங்குகிறது. இது உங்கள் website மற்றும் application கழை மேற்பார்வை இடலாம் அது ஒரு தனி வெப் சர்வர் ஆகட்டும் அல்லது பல web சர்வர் ஆக இருக்கலாம்.
IIS ஆனது நான்கு வகையான சேவைகளை வழங்குகிறது.
1) The World Wide Web (WWW) - இது இணையவழியாக மற்றும் local network வழியாக செயல்படும் content கழை வெளியிடுவதற்கு உதவுகிறது.
2) File Transfer Protocol (FTP) - இது உபயோகர்களுக்கு கோப்புகள் பரிமாற்றம் செய்யவும், கோப்புகள் ஏற்றவும், கோப்புகள் தரவிறக்கம் செய்யவும் உபயோக படுத்தபடுகிறது.
3)Network News Transfer Protocol (NNTP) - இந்த சேவையானது கலந்துரையாடும் group இக்காக பயன்படுத்த படுகிறது.
4) Simple Mail Transfer Protocol (SMTP) - இந்த சேவையானது மின் அஞ்சல் அனுப்பவும், பெற்று கொள்ளவும் பயன்படுகிறது.
IIS ஆனது windows தொகுப்பின் ஒரு பாகமாகும், இதை நிறுவ control panel சென்று add or remove programs என்ற பிரிவை தேர்வு செய்து add/remove wondows componets என்ற பிரிவில் கிளிக் செய்யவும், அதில் வரும் தகவலை தொடர்ந்து Internet Information Services என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்யவும், அதன் பிறகு next button குடுக்கவும், இதற்கு windows CD,  drive இன் உல்  இடவேண்டியது அவசியம்.
இது 1 நிமிடத்துக்கு குறைவாகவே எடுத்துகொள்ளும், இப்போது இது நிறைவு பெற்றவுடன், உங்களுடைய IIS சர்வர் தயார், அதனுடைய சேவைகளை பயன் படுத்தி மகிழுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாக இடவும்.
நன்றி 

1 comment:

  1. Á¢ì¸ ¿ý¡¢ ¦À¡¸¢ ¾í¸ú ÅÕ¨¸ìÌõ ¸ÕÐìÌõ

    ReplyDelete